ஊர்வசியோ உள்ளூர் தேவதையோ யாரடிநீ

பார்வையில் ஆயிரம் ஏதோ சொல்கிறாய்
பார்க்கும் மௌன விழிகளின் அசைவினில்
யார்க்கும் அஞ்சா நெறிகளில் நடக்கிறாய்
ஊர்வசியோ உள்ளூர் தேவதையோ யாரடிநீ

----ஒரே அடி எதுகை நாலு சீரால் அமைந்த கலிவிருத்தம்

பார்வையில் ஆயிரம் என்னவோ சொல்கிறாய்
பார்த்திடும் மௌன விழியின் அசைவினில்
யார்க்கும்அஞ் சாதவளோ உள்ளூரின் தேவதையோ
ஊர்வசியோ யாரடி நீ

-----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பார்வையில் ஆயிரம் என்னவோ சொல்கிறாய்
பார்த்திடும் மௌன விழியினில் -- போர்க்கொடியோ
யார்க்கும்அஞ் சாதவளோ உள்ளூரின் தேவதையோ
ஊர்வசியோ யாரடி நீ

---- ஒரு விகற்ப நேரிசை வெண்பா

சில குறிப்புகள் :

போர்க்கொடியோ ---இவள் பூங்கொடிதான் ஆயினும் அஞ்சாதவள்
ஆதலால் போர்க்கொடி

யார்க்கும் அஞ்சா நெறிகளில் ----பாரதியின் சொல்லாடல்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-22, 11:17 am)
பார்வை : 61

மேலே