சொப்பனக் கிறுக்கன்
பராரியாய்த் திரிந்து
பகற்பொழுதைப் பாழாக்கி
அந்தி நெருங்க நெருங்க
அவசர அவசரமாய் மேயும்
ஆடு மாடு போலத்தான் நானும்
மைத்துனிக்கு பிறந்தநாள்
மனைவியின் முப்பாட்டன் நினைவுநாள்
இளமைக்காலம் இப்படித்தான் விரையம்
ஆரத்தழுவியது அந்திமம் என்னை
ஆழ்மனப் பதிவுதனை அச்சேற்றி நூலாக்க
மும்முரமாய் முயற்சிக்கிறேன்
நகையாடி களிக்கிறது நட்புவட்டம்
மனநல மருத்துவம் மந்திரத்தாயத்து உசிதமாம்
மனைவி தரப்பு வாதம்
ஆத்திரம் தாளாமல் ஆழ்ந்தேன் நித்திரையில்
ஆவியைப் பிழிந்தெடுத்து