உண்மைகள் 6
அகத்தில் பூத்த மகிழ்ச்சி
அன்றலர்ந்த மலரைப் போல்
அதன் நினைவு என்றும் மணக்கும்
சம்பாதித்த செல்வத்தை
சிரசில் வைத்து காத்திடு
இதயத்தில் வைக்காதே !
உன்னிடமிருக்கும் பணம்
உன் தவறுகளை மறைக்கும்
உனது நிம்மதியை கெடுக்கும்
மாந்தருக்குக் கல்வி
முக்கியமென்றாலும்
நந்நடத்தை தான் மதிப்பை உயர்த்தும்
தோல்வியைக் கண்டு
துவளாமல், அநுபவத்தை நீ பெற்றால்
உனக்கு வெற்றி நிச்சயம்
பழி வாங்கும் உணர்வு
பயன் ஏதும் தராது
பயப்பட வைக்கும் அநுதினமும்
உயரத்தில் ஒருவரை அமர்த்த
வாக்கு விலை போகிறது
மக்கள் தான் பாவம்
தன்னம்பிக்கை
துணை நின்று தோள் கொடுத்தால்
தோல்வியும் வெற்றியாக மாறும்
கற்பனைக்கு முன்னோடியாக
காதலைக் காட்டிய கண்கள்
கை கொடுத்து உதவியது