டாக்டர் கலைஞர் மு கருணாநிதி

கலைஞர் கருணாநிதி !!
------------

உழைப்பே ஓய்வென உழைத்தே மகிழ்ந்தவர் /
அழைக்கும் யாவரின் அன்பினில் நிறைந்தவர் !

முத்தமிழ்க் கொண்டொரு முற்றுகை இட்டவர் /
வித்தகர் வடமொழி விலகிட அடித்தவர்!

ஆட்சியில் தமிழரின் ஆதிக்கம் கண்டவர் /
மாட்சியில் தமிழுமே மலர்ந்திடப் பார்த்தவர் !

எதிரிகள் தம்மையும் எழுந்திடச் செய்தவர் /
எதிலும் தமிழையே முதலென வைத்தவர்!

ஆருர் தந்த ஐயனின் புகழினை /
ஊரும் உலகும் உவப்பொடு வாழ்த்துமே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (7-Jul-22, 9:10 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 30

மேலே