ரங்கநாதன் கவிதைகள் - வெகுமதி

ஓருயிரு மாயும் போது
ஈருடலும் சாயுமின்னு
கண்ணும் கண்ணும் பேசும் போது சொன்னாளே - இன்று
கண்டவர்க்கு கழுத்தை நீட்டி நின்னாளே

பல்லழகு சொல்லழகு
பாங்கான நடையழகு - என்னை
மெட்டு கட்டி பாட்டெழுத சொன்னாளே
மெட்டியிட்டு வேறொருத்தன் பத்தியமாய் நின்னாளே

ஊரறிய உறவறிய
உன்வீடு விளக்கெரியும் - மாலையிட்டு
ஊர்வலமாய் போவமின்னு சொன்னாளே - கோலமிட்டு வேறொருத்தன் வாசலிலே நின்னாளே

பாலோடு பழமிருக்கும்
பள்ளியறை பூ மணக்கும்
காலம் வரும் காத்திருன்னு சொன்னாளே - என்னை
கலங்க விட்டு காத தூரம் போனாளே

தவமாய் தவமிருந்தேன் - என்
தாயோட முகம் மறந்தேன்
தேவதையாய் மனசுக்குள்ளே வந்தாளே - எனக்கு
வேதனையை வெகுமதியாய் தந்தாளே
...... ஓருயிரு மாயும் போது

கவிஞர். நரியனுர் ரங்கு
செல் : 9442090468
ஈமெயில் : நரியனுர்ரங்கு@ஜிமெயில்.காம்

எழுதியவர் : கவிஞர். நரியனுர் ரங்கு (14-Mar-14, 6:36 pm)
பார்வை : 168

மேலே