நீ வருவாயென

பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ;
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்;
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்,
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்
நீ வருவாயென வாயிலை நோக்கி.....

எழுதியவர் : கலைப்ரியா சோமசுந்தரம் (18-May-18, 12:09 pm)
சேர்த்தது : கலைப்ரியா
Tanglish : nee varuvaayena
பார்வை : 427

மேலே