நீ, நீயாய் என்னவளாய் எப்போதும் என்னுடன்

அன்று நீயும் நானும்
'ஊட்டி மலர்க காட்சியில்'
கைகோர்த்து சுற்றி திரிந்தோம்
பட்டாம்பூச்சிகள் போல்,
வானில் தோன்றிய வானவில்லை
தொட்டுவிட ஆசைப் பட்டது
நம் மனது, காதலால் தூண்டப்பட்டு;
வானவில் மறைந்தபோதுதான்
நாம் மண்ணில் இருப்பது உணர்ந்தோம் ;
காதல் மயக்கத்தில் நாம்...............
அங்கு ஓர் இடத்தில் சட்டையில்
நமது 'புகைப்படத்தை.பதிவு
செய்து உடனடியாய்த் தருவது
கேள்விப்பட்டு , அங்கு சென்று
என் வெள்ளை சட்டையில்
'என் புகைப்படம், உன் டீ-ஷர்ட்டில்
உந்தன் புகைப்படம் என்று
எடுத்துக்கொண்டோம் '

என்னவளே, இன்று நீ இல்லை
ஆனால் நீ என்றும் என் உள்ளத்தில்
உறைகின்றாய் என்னவளாய்
அதில் மற்றோர் பெண்ணிற்கு
இடமே இல்லை எப்போதும்
இதோ உன் புகைப்படம் கொண்ட
நீ எனக்களித்த உன் சட்டையில் நீ ,
உன் நினைவாய் என் பொக்கிஷமாய்
அது இப்போது என்னிடத்தில்
உன் நினைவாய், நீ இல்லா இடத்தில்
நீயாய் இருந்து நீ இல்லா தனிமையில்
உனைக் காணவைக்கிறது
இது போதும் உன் நினைவில்
என் காலமெல்லாம் வாழ்ந்து
முடிப்பேன் உன் நினைவில் என்னவளே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-May-18, 12:20 pm)
பார்வை : 215
மேலே