வந்துவிடு சோடிப்புறா

கண்ணு ரெண்டும் காஞ்சு போச்சு... உம்மொகத்த காணாம...
பச்சதண்ணி அனலாச்சு... நெலா வெளிச்சம் நெருப்பாச்சு...
சோடிப்புறா நீயில்ல... எங்கூடும் இங்கில்ல...
எங்க புள்ள நீயிருக்க... உன் நெனப்புல தான் நானிருக்க...
இரகசியத்த சொல்லிபுடு... அதிசயத்த செஞ்சுபுடு..
பத்திரமா வச்சிருக்கேன் பாவிமக உம்மனச...
எம்மனச காணலியே... கொண்டுட்டு போயிட்டியே...
ஒறக்கமென உலகத்துக்கு... போயி ரொம்ப நாளாச்சு...
காத்துல தான் உன் வாசம்... அழகழகா கொஞ்சிப்பேசும்...
வாடுறனே பணவேரா... வந்துவிடு மழநீரா...
வாசமுள்ள ரோசாவே... சாகுறனே ராசாவே...
சத்தியமா சொல்லுறேன்டி... நித்தமும் உன நெனக்கிறேன்டி....
ஆசவெச்சேன் உன்மேல... பேச்சுமூச்ச எனக்கில்ல...
சீவனுமே போயாச்சு... வாயேன்டி ராசாத்தி...!!!!

எழுதியவர் : (4-Oct-15, 1:49 pm)
பார்வை : 102

மேலே