இனம்

புலிகள் இல்லாத காடு
நரிகளுடையதானது.!

மும்பையோ..
கேரளாவோ..
ஆந்திராவோ..
எவனும்..
அழாததை வைத்தே
இனப்படுகொலை
என முடிவுக்கு வந்தது உலகம்.!

இவர்கள்
விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
என்று சொல்லக்கூட
புதைத்த இடமே
தெரியாமல் போனது.!

முள்ளிவாய்கால் நினைவுநாள்
முத்துக்குமார் நினைவுநாள்
என
கட்சி கூடுவதற்கு
தேதி கிடைத்திருந்தது
தமிழகத்திற்கு.!

ஆடையும்
அங்கமும் கிழிந்தது போக
அழுதுமுடித்திருந்தால்
சிறுமி ஒருத்தி.!

பதுங்கு குழிக்குள்
பத்திரப்படுத்திய வாழ்க்கை
முகாம்களிலே
முடிந்துகொண்டிருந்தது.!

இதுவும் கடந்து..
தமிழ் ஈரம் காய்ந்து..
புலி படத்துக்கு வரிசையில்
நிற்கிறோம் நாம்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (4-Oct-15, 1:35 pm)
Tanglish : inam
பார்வை : 128

மேலே