நிலாக்கால மழை
தோட்டாக்கள்
ஊறிய என்
உணர்சியில்!
பட்டாம் பூச்சிகளின்
தோட்டம் செய்தாய்!!
நதிக்கரை மேகத்தில்
நாணம் குழைத்து
சீ போடா எனும்
வார்த்தையெங்கும்
தெளித்தாய்!
வானவில் கிழித்து
வசந்த சாலையில்
விரித்து!
மன மயானத்தை
உன் முத்தத்தின்
மைதானமாக்கினாய்!
கொஞ்சம் கொஞ்சமாய்
இன்ப கூடையில்
இட்டு நிறப்பிய
உன் மெளனத்தில்!!!
ஒவ்வோர் முறையும்
வெவ்வேறு மரணம்!
பூமத்திய ரேகையில்
பூக்கள் பறிக்க
போன எனை
மலர்ச்சாலை வழியில்
மயங்க வைத்தாய்!!
முரண்பாட்டு
முட்டுச்சந்தில்
முகாமிட்டு
உயிரெங்கும்
தீ மூட்டி ரசித்தாய்!!
ஒருதலை காதலை
மறத்தலுக்கே
உயிர்போகும்!!
உனை மறப்பின்!
உடல் கிழித்து
உயிர் உருவி
காற்றெங்கும் வீசி
பெருந்தீயில் மூழ்கிட
காத்திருக்கும்
என் காதலை!!
நீ உணர்வாயோ!
மீண்டும் மெளனத்தில்
மீளா மரணம்
தருவாயோ!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
