மனதிடம் வினாவும் புத்தி
உனது
விருப்பு வெறுப்புகளை
பகிற தகுதியற்றவன்
என நினைத்தாயோ?
நின்
தனிமையில் வருந்துவது
நீ மட்டுமல்ல
உடைந்து போவது
நானும் தான்.!
நான்
சினங்கொள்வேன்
என நினைத்தே
பல தருணங்களில் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்
உன்னிடம்!
என்
கோபத்தை ஏற்க மறுக்கும்
உனக்கு என் பற்றுதல் புரிந்திடுமோ.?
மெய்யாய்
நீ இட்ட சண்டை
பொய்யாய்
கலகலத்த கதையென
எதுவும் இல்லை
நம் நட்பில். !
உன்மேல்
அக்கறையின்றி நானும்
என்மேல்
நம்பிக்கையின்றி நீயும்
ஒதுங்குவது
உயிருக்கு
ஒவ்வாது!
# மனதிடம் வினாவும் #புத்தி
- கார்த்திக் ஜெயராம்