நட்பு

நட்பு


நம்பிக்கை பெறுவதற்கு நட்டு வைத்த வித்துக்களில் ...

மொட்டு விட்ட முதல் முத்தே !
முடிவில்லா நம் நட்பே !!!

வானகத்தை வெற்றிகொள்ள ...
வையகத்தில் வளர்ச்சிபெற்று
வானுயர .. நீ புகழோடு வாழ்ந்திடவே ...

முயற்சியதை தொடர்ந்து செய் !
தோல்விகள்தான் உன் தோழன் !
வெற்றிகள்தான் உன் மகுடம் !

உழைப்பு மட்டும் நம்முடனே
உறுதியாக நிலைத்திடவே
நட்புடனே கைகோர்த்து ...
நலமுடனே வாழ்ந்திடவே !

பொன்னாளாம் இந்நாளில்
உன்னில் உறுதியாய்
உன்னதமாய் வாழ்த்துக்காட்டி
உலகையே வென்றிடுவாய் !!!

எழுதியவர் : டீ எ முஹம்மது ஜமாலுதீன் (1-Apr-18, 11:38 am)
Tanglish : natpu
பார்வை : 273

மேலே