என்னருமை இனியவனே

என்னருமை இனியவனே,

வாழ்க்கையெனும் போர்க்களத்தில்
வெற்றிகளை நாட்டிடவே ...
வேதனையை வேரோடு
அறுத்தெறியும் மனம்தனை ...
வேரூன்றி மணமத்திலே
வேட்கையுடன் வைத்திடுவாய் !

பாலூன்றும் பாசத்தை
பகுத்தறிவில் புகுத்திட்டு ...
பண்புடனே பழகுவதை
புத்தியிலே வைத்திட்டு ...
அனைவரின் ஆசிகளை அன்புடனே பெற்றிட்டு ...
ஆயுள்வரை நீ புகழோடு வாழ்ந்திடவே ...

எந்நாளும் நன்நாளாய்...
உன்நாளில் வருவதற்கு ...
உன்னில் உறுதியாய் ,
உன்னதமாய் வாழ்ந்திட்டு...
உலகையே வென்றிடுவாய் !!!
என்றும் அன்புடன் ,
ஜமால் .

எழுதியவர் : டீ எ முஹம்மது ஜமாலுதீன் (1-Apr-18, 11:43 am)
பார்வை : 262

மேலே