Mohamed Jamaludeen - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/unkhc_43937.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Mohamed Jamaludeen |
இடம் | : பள்ளப்பட்டி.Karur |
பிறந்த தேதி | : 03-May-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 120 |
புள்ளி | : 24 |
என்றும் அன்புடன்....
ஆயிரமாயிரம் கலசங்கள் உண்டு - ஆனால்
அந்த ஓர் கலசத்திற்கு மட்டும் - நிழல் கூட
புவியில் அடைக்கலம் என்பதே கிடையாது !!!
"தஞ்சை பெரியகோயில் "
சோழ மண்டலத்தில் சோம்பேறிகள் இல்லை ...
என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு !!!
மத ஊர்வலங்கள் தேவையா?
வையகம் தந்த வான்புகழ் மொழியாம்!
வள்ளுவன் கண்ட முப்பால் மொழியாம்!
பாரதி புகழ்ந்த மெல்லிசை மொழியாம்!
பாமரனும் பயிலும் முத்தமிழ் மொழியே!!!
மன்னர்கள் போற்றும் சங்கமிகு மொழியாம்!
மங்கையருக்கேற்ற அங்கமிகு மொழியாம்!
சான்றோர் போற்றும் சரித்திர மொழியாம்!
சங்கே முழங்கு.என் தமிழ் மொழியே!
"அகிலம் அனைத்திலும் ஆயிர மொழிகளிருப்பினும்
வீறுநடை போடும் தமிழ்." ( புது குரல் )
அழகிய கண்கள் அலைமோதுகையில்
கொஞ்சிப் பார்க்குது காதல் சாவி ...!
அழகுப் பதுமையின் அங்கம் பார்க்கையில்
கொஞ்சம் எட்டிப் பார்க்குது காமச் சாவி ...!
இளமையை ரசிக்க இன்பச் சாவி!
முதுமையில் இனிக்கும் அனுபவச் சாவி !
கல்லச் சாவி கொண்டு திறந்தால்
கல்லறை சென்றும் கலவரமே ..!
நல்ல சாவி கொண்டு திறந்தால்
நடப்பவை எல்லாம் நல்வரவே ...!
எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
ஜனனத்தில் நுழைய ...
மரணத்தில் தொலைய...
எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
சாவியை தொலைத்தோர் சிலர் ..
பூட்டை தேடிக்கொண்டே பலர் ...?
எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு
எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...!
தேடிக் கண்டு நீ கொண்டால்
அடக்குமுறை எனும் ஆயுதத்தை
அஹிம்சை எனும் அன்பினால்...
அகிலமதை குழந்தையாய்
அனைத்து கொண்ட அண்ணலே!!!
சுதந்திர தாகத்தை தணிக்க
நீ கையாண்ட யுக்தியை...
ஆட்சி செய்த அந்நியரும்
அந்நியரில் சில கன்னியரும்
வியக்கவைத்த வித்தகரே!!!
விடுதலை பெற்று தந்து...
விண்ணை விட்டுச்சென்ற விண்மீனே!!!
உம்மை வீட்டுச்சிறையில்-புகைப்படமாய்...
வைத்துக்கொண்டோம் எம்முடனே!!!
இன்னொரு நீ எமக்கு பிறப்பாய் என்று!!!
படிப்பினை புகட்டி ,பண்பினை வளர்த்து ;
அறிவினை அடர்த்தி ,அறமதைத் திணித்து ;
இசையினை கொடுத்து ,இயல்பினை மாற்றி ;
ஆக்கத்தை பெருக்கி ,அழிவினை குறைத்து ;
உவமையை பற்றி ,உலகையே சுற்றி ;
ஊக்கத்தை ஊட்டி ,உரமதை பெற்று ;...
நதியினை இணைத்து ,வளமதை பெருக்கி ;
முகிலினை கிழித்து ,வானத்தை தொட்டு ;
வையகம் வியந்து ,வான்புகழ் கிடைத்து ;
விஞ்ஞான உலகினில் ,விசித்திரம் படைத்து ;
அஞ்ஞான புகழினில் ,ஆட்சியை நடத்தி ;
மெய்ஞான வாழ்வினில் ,மேதமையை கட்டி ;...
மேலோங்கும் யுக்தியை ,மேன்மையுடன
முகம் பார்த்து சிரித்தேன் !
முழு மதி கண்டேன் !
கண் பார்த்து மறந்தேன் !
கனவுகள் கண்டேன் !
மனம் பார்த்து உறைந்தேன் !
ஏன் மதியையும் மறந்தேன் !
மலைச்சாரல்களும் ,மழைக்காற்றும்
மனமயக்கும் உன் மணமும் !
மாலை இதத்தினிலே !
மன்னவள் மடியினிலே !
மாலை சூடும் விண்மீன்கள் !
சோபனம் கூறும் நிலவினிலே !
புல்வெளி காற்றும் புகழ் கூறும் எந்தனுக்கு !
ஏங்குகிறேன் உந்தன் நல்பதிலுக்கு !!!
உதடுகள் இணையாத உன்னத காதல் !!!
காதல் வந்த காலத்தில்
கலவு கொண்ட இதயத்தை
காலங்கள் கடந்து சென்று
கண்ணியத்தில் வைத்திட்ட
கண்ணியவள் வாழ்ந்திடவே !
கருணைதனை காட்டிடுவாய் !!!
காதல் தந்த கனியதனை
கனவுகளில் சுவைத்திட்டு
காதலின் கன்னியத்தை
காத்திட்ட காதலரே !!!