இந்திய தாயின் எழுச்சி காண்போம்

படிப்பினை புகட்டி ,பண்பினை வளர்த்து ;
அறிவினை அடர்த்தி ,அறமதைத் திணித்து ;
இசையினை கொடுத்து ,இயல்பினை மாற்றி ;
ஆக்கத்தை பெருக்கி ,அழிவினை குறைத்து ;
உவமையை பற்றி ,உலகையே சுற்றி ;
ஊக்கத்தை ஊட்டி ,உரமதை பெற்று ;...

நதியினை இணைத்து ,வளமதை பெருக்கி ;
முகிலினை கிழித்து ,வானத்தை தொட்டு ;
வையகம் வியந்து ,வான்புகழ் கிடைத்து ;
விஞ்ஞான உலகினில் ,விசித்திரம் படைத்து ;
அஞ்ஞான புகழினில் ,ஆட்சியை நடத்தி ;
மெய்ஞான வாழ்வினில் ,மேதமையை கட்டி ;...

மேலோங்கும் யுக்தியை ,மேன்மையுடன் கற்று ;
வானோங்கும் திறமையை ,வாழ்வினில் பெற்று ;
பார் போற்றும் நாடாய் ,பாரதத்தை மாற்றி ;
பூவுடனே நாறும் ,நறுமணம் போங்க ;
வீறுநடை கொண்டு ,வீரமதை கண்டு ;
பலமிகுந்த நாடும் ,பரஸ்பரம் காண ;...

"எழுச்சிமிகு இளைஞனே இருகரம் சேர்த்து
இந்திய தாயின் எழுச்சி காண்போம்"!!!

எழுதியவர் : டீ எ முஹம்மது ஜமாலுதீன் (2-Apr-18, 7:01 pm)
சேர்த்தது : Mohamed Jamaludeen
பார்வை : 103

மேலே