உதடுகள் இணையாத உன்னத காதல்

உதடுகள் இணையாத உன்னத காதல் !!!

காதல் வந்த காலத்தில்
கலவு கொண்ட இதயத்தை
காலங்கள் கடந்து சென்று
கண்ணியத்தில் வைத்திட்ட
கண்ணியவள் வாழ்ந்திடவே !
கருணைதனை காட்டிடுவாய் !!!

காதல் தந்த கனியதனை
கனவுகளில் சுவைத்திட்டு
காதலின் கன்னியத்தை
காத்திட்ட காதலரே !!!

"துருவங்களாய் நீர் இருந்தால்" !!!
"இதயங்களை இழந்திருந்தால்" !!!
"இன்னல்கள் அடைந்திருந்தால்" !!!
"இன்னிசைகள் இசைத்திருந்தால்" !!!
"அவள் வாழ்வே உன் கனவனால்" !!!
"உன் உயர்வே அவள் நினைவானால்" !!!

நிலையான காதல் உங்களுடையதே !!!

எழுதியவர் : டீ.எ.முஹம்மது ஜமாலுதீன் (22-Mar-18, 1:11 pm)
சேர்த்தது : Mohamed Jamaludeen
பார்வை : 98

மேலே