மஹாத்மாஇப்பொழுதும் எப்பொழுதும்
அடக்குமுறை எனும் ஆயுதத்தை
அஹிம்சை எனும் அன்பினால்...
அகிலமதை குழந்தையாய்
அனைத்து கொண்ட அண்ணலே!!!
சுதந்திர தாகத்தை தணிக்க
நீ கையாண்ட யுக்தியை...
ஆட்சி செய்த அந்நியரும்
அந்நியரில் சில கன்னியரும்
வியக்கவைத்த வித்தகரே!!!
விடுதலை பெற்று தந்து...
விண்ணை விட்டுச்சென்ற விண்மீனே!!!
உம்மை வீட்டுச்சிறையில்-புகைப்படமாய்...
வைத்துக்கொண்டோம் எம்முடனே!!!
இன்னொரு நீ எமக்கு பிறப்பாய் என்று!!!

