வான் மழையே வாராயோ

ஓடும் வெண் மேகம் கறுத்திட வேண்டும் /
அது காற்றோடு இணைந்திட வேண்டும்./ இணைந்த வேகத்தில் மழைத்துளி பிறந்திட வேண்டும்./
அவை மண் நோக்கி விழுந்திட வேண்டும்/

வான் மகளே வரம் ஒன்று தந்து விடு /
வான் மழையாக இறங்கி வந்து விடு /
வறண்ட நிலத்தைக் காத்து விடு /
வறட்சிக் கொடுமையை விரட்டி விடு /

போட்ட விதைக்கு நீர் கொடுத்து விடு /
நாடு எங்கும் பசுமையைப் பரப்பி விடு /
வாடிப் போகும் விவசாயி வாழ்வை மீட்டு விடு /

அவனது கண்ணீர் கடலை நிறுத்தி விடு /
தாகம் தீர்க்க தண்ணீரை தேக்கி விடு /
தவிக்கும் எங்களது வாடிய முகம் பார்த்து!
வான் மழையே மறுப்பின்றி வாராயோ?

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (11-Sep-18, 6:12 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 122

மேலே