நீயும் நானும்

நீயும் நானும்
நீ என்பது
நான் காணும் 'அவள்'
நான் என்பது
நீ காணும் 'அவன்'
நீ காணும் அவனில்
நானும்
நான் காணும் அவளில்
நீயும்
இல்லாதிருக்கலாம்
காண்பதில் என்ன இருக்கிறது...
நீ நீயாகவும்
நான் நானாகவும்
நம்மில் இயல்பாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டபின்.
நிலாரவி.