yazar arafath - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : yazar arafath |
இடம் | : tenkasi |
பிறந்த தேதி | : 20-Sep-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 20 |
நான் ஒரு கவிதை விரும்பி . பல கவிதைகளை எழுதி இருகிறேன்
தியாக மனம் வேண்டுமென்று
காவி நிறம் கொண்டாயோ?
தூய மனம் வேண்டுமென்று
வெள்ளை நிறம் கொண்டாயோ?
பசுமை வளம் வேண்டுமென்று
பச்சை நிறம் கொண்டாயோ?
தர்மம் தலை காக்கும் என்று
தர்ம சக்கரம் கொண்டாயோ ?
ஓங்கி உயர்ந்த கம்பத்தில்
நீ பட்டொளி வீசிடுவாய் !
நூறு கோடி கரங்களால்
நீ போற்ற பட்டிடுவாய் !
வேற்றுமையில் ஒற்றுமையை
நாடெங்கும் கொண்டிடுவாய் !
வேற்று நாட்டு சதிகளை
வேரோடு களைந்திடுவாய் !
தலைகீழாய் கொடியேற்ற
அனுமதிக்க மாட்டோம் !
கொடி மீது சிறு கீறல் விழுந்தால் பொறுக்கமாட்டோம்!
ஏன் என்றால்
நீ இந்தியர்களின்
தேசியக்கொடி மட்டுமல்ல...
எங்கள் ஒவ்வொருவரின்
தொ
பாரத தாயே!
தமிழன்னையே!
அன்று உன்
விடுதலைக்காக
யுத்தப்போராட்டம்
நடத்தினார்கள்...
இன்று நீ பெற்ற
விடுதலையை வைத்து
முத்தப்போராட்டம் அல்லவா
நடத்துகிறார்கள்...
ஒழுகும் குடிசையில்
வசித்திருந்தாலும்
ஒழுக்கம் நழுவாத
உயர்குடிகள் நாம்!
காற்றும் நுழையாத
கண்ணாடி மாளிகையில்
ஒழுக்கம் மட்டும்
ஓய்வெடுக்கலாமோ?
ஒழுக்கமற்ற
உயர்திணைகளெல்லாம்
அஃறிணைகளே!
ஓ...மெத்த படித்த மேதைகளே!
நாய்கள் நடுவீதியில்
நடத்துவதை போல
நீங்கள் நடுவீதியில்
நடத்துவதுதான்
நாகரீகமா?
இனியும்
நம் கலாச்சாரத்தின் மீது
கல்லெறியாதீர்கள்...
நம் பண்பாட்டை
பாடையில் ஏற்றாதீர்கள்...
படுத்தவுடன்
தூக்கம் வேண்டும் ...
பசித்தவுடன்
உணவு வேண்டும்...
நாணத்தோடு
பெண்மை வேண்டும்...
சுமப்பதற்கு
தாய்மை வேண்டும்...
வாழ்க்கை முழுவதும்
காதல் வேண்டும்...
மனைவியே
காதலியாய் வேண்டும்...
நேசத்துடன்
நண்பர்கள் வேண்டும்...
வேசமில்லா
உறவுகள் வேண்டும்...
ஊக்குவிக்கும்
சுற்றங்கள் வேண்டும்...
வானம் வரை
எல்லைகள் வேண்டும்...
பகலின் விளம்பரம்
சூரியன்!
இரவின் விளம்பரம்
சந்திரன்!
மழையின் விளம்பரம்
வானவில்!
மலையின் விளம்பரம்
கானல் நீர்!
பெண்மையின் விளம்பரம்
தாய்மை!
தாய்மையின் விளம்பரம்
சேய்மை!