முத்தப்போராட்டம்

பாரத தாயே!
தமிழன்னையே!
அன்று உன்
விடுதலைக்காக
யுத்தப்போராட்டம்
நடத்தினார்கள்...
இன்று நீ பெற்ற
விடுதலையை வைத்து
முத்தப்போராட்டம் அல்லவா
நடத்துகிறார்கள்...

ஒழுகும் குடிசையில்
வசித்திருந்தாலும்
ஒழுக்கம் நழுவாத
உயர்குடிகள் நாம்!

காற்றும் நுழையாத
கண்ணாடி மாளிகையில்
ஒழுக்கம் மட்டும்
ஓய்வெடுக்கலாமோ?

ஒழுக்கமற்ற
உயர்திணைகளெல்லாம்
அஃறிணைகளே!

ஓ...மெத்த படித்த மேதைகளே!
நாய்கள் நடுவீதியில்
நடத்துவதை போல
நீங்கள் நடுவீதியில்
நடத்துவதுதான்
நாகரீகமா?

இனியும்
நம் கலாச்சாரத்தின் மீது
கல்லெறியாதீர்கள்...
நம் பண்பாட்டை
பாடையில் ஏற்றாதீர்கள்...

பிச்சை புகினும்
கற்கை நன்றே
என்றார்கள்...
அந்த கற்கை
இல்லாவிடினும்
கற்பு நன்றே
என எண்ணுங்கள்!
-அராபத்

எழுதியவர் : யாசர் அராபத் (18-Nov-14, 11:48 am)
பார்வை : 57

மேலே