என் மனமும் மதியும்
ஒரு வாலிபன் அயல்நாட்டில் பணிபுரிந்துகொண்டிருகின்றான் ஒருநாள் அவனுடன் பணிபுரியும் சக ஊழியரில் ஒருவர் அவனிடம் வந்து "ஏன் சோகமாக இருக்கின்றாய்?" என்று கேட்கின்றார். அதற்க்கு அந்த வாலிபன் அவன் துறையில் உள்ள ஒரு உயரதிகாரியை காட்டி "அவரை போல் என்னால் ஆக முடியவில்லையே" என்று கூறுகின்றான். அதற்க்கு அந்த ஊழியர் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் பணிபுரியும் பல ஊழியர்களை காட்டி "உனக்கு கீழே இவர்கள் பணிபுரிகின்றார்கள்" என்று கூறுகிறார். மறுநொடி அவனது சோகம் சுகமாக மலர்கிறது!
அந்த வாலிபன் என்னுடைய மனம்!
அந்த சக ஊழியர் என்னுடைய மதி!
இவண்,
-கார்த்திக் நித்தியானந்தம்.