விலையில்லா பொக்கிஷம்
உன் உதடுகள் பட்டு உதிர்ந்த திராட்சை
எச்சில் பட்ட தேநீர் கோப்பை
நீ ஊட்டிவிட்ட ஒரு வாய் சாதம்
கை கழுவியதும் நீட்டிய முந்தானை
கண்ணீர் துடைத்த கருணை உள்ளம்
எனக்காய் துடிக்கும் இன்னொரு இதயம்
யாவையும் நீ செய்தால் சுகம்தான்...
பசி மறக்கும் பால் விழிகள்
கருமை நிறைந்த மேகக் கூந்தல்
முத்துச்சிதரும் முதன்மை புன்னகை
பெயரை சொன்னால் மலரும் பூக்கள்
என்ன சொன்னாலும் நீயே மிகைதான்....