தேடுகிறான்

தொலைத்தவனும்
தேடுகிறான்
தொலைக்காதவனும்
தேடுகிறான்
தொலைவில்
தெரிவதை
தொட்டுவிடத்
துடிக்கிறான்
நிலையான
நிம்மதியை
இடைவிடா
இன்பத்தை
ஆழ்கடல்
அமைதியை
மட்டற்ற
மகிழ்ச்சியை
அளவிலா
செல்வத்தை
நிரந்தரமிலா
வாழ்க்கையில் !
பழனி குமார்
17.01.2019