பருவ மழை நானுனக்கு

கொல்லும் விழி நீயெனக்கு
மெல்லும் மொழி நானுனக்கு ..
அண்டமடி நீயெனக்கு
அன்னை மடி நானுனக்கு ..
*** அகமெல்லாம் சிலிர்க்குதே
தோழி நின்றன் வாஞ்சையிலே
***எந்தாய் மொழி மெல்லுகிற
தேன்மொழியே...!!!
நிலவின் மகள் நீயெனக்கு
அணியுங் கழல் நானுனக்கு ..
சிந்தும் கவி நீயெனக்கு
ஏந்தும் புவி நானுனக்கு ..
***சொல்லுருவி கூறுமிடத்து
நெஞ்சுருகி போவதேனோ
***சிந்தையினை சிறைகொண்ட
செந்தேனே...!!!
உருவ சிலை நீயெனக்கு
பருவ மழை நானுனக்கு ..
ஆறாந் திணை நீயெனக்கு
ஆயுல் துணை நானுனக்கு ..
***நங்காய் நாணயிலே
நாடியெண் கூடுவதேன்
***உழலும் நினதன்பிலே
நெகிழ்ந்தேனே...!!!