கல்லூரி தோழியே

[] கல்லூரி தோழியே ...
----------------------------------------------------------------------------


பதினேழு வயது வரை
நீ யாரென்று தெரியாது !
பதினேழுக்கு பின்பான
என் வரலாறை
நீ இல்லாமல் எழுத முடியாது !

கல்லூரி கானும் முதல் தினம்
பார்க்கும் எல்லோரும் புது முகம்
தலைமுறை கானாத தனி சுகம்
கண்டதும் தந்ததுன் கனி முகம்

கருவறை வேறான போதும்
நம் உறவுக்கு -
கல்லூரி அறை வேராகும் என்று
அதுவரை நமக்கு தெரியாது !

உன் செயல் பார்த்தேன்
உன் குணம் பார்த்தேன்
என் நகல் நீ என்று
நான் அகம் உணர்ந்து கொண்டேன் !

இயற்கை கை காட்டும்
இன்பத்தோழி இவள் என்று
உன்னோடு இணைந்து கொண்டேன் !

முதல் பேச்சிலே அனுபவித்தோம்
இனம் புரியாத சந்தோசத்தை !
அன்றே கழற்றி வைத்தோம்
ஒளிவு மறைவு வெளிவேசத்தை !

விட்டு கொடுத்தால்
சண்டை இல்லை - ஆனால்
நம் சண்டையே
விட்டு கொடுப்பதில் தான் !

உனக்காக விட்டுக்கொடுக்க
ஒருநாளும் என்னை நீ விடுவதில்லை !
உனக்கு விட்டுக்கொடுக்கும் வரை
சண்டையை நானும் விடுவதாயில்லை !

நான் நினைப்பேன்
நீ உரைப்பாய் !
உனக்கு பகை இல்லாத போதும்
என் எதிரியை முறைப்பாய் !

என் குழப்பங்களுக்கான தெளிவை
நான் உன்னிடம் கேட்பதில்லை !
ஏனென்றால்
உன்னை பார்த்ததுமே
நான் தெளிவாகிவிடுகிறேன் !

எதிர்பார்த்து காத்திருந்த
சனி ஞாயிறுகளை
ஏன் வருகின்றதோ
என என்ன வைத்தாய் !
இருண்டு கிடந்த என்
வாழ்க்கை வானத்தை
உன் விண்மீன் விழியால்
மின்ன வைத்தாய் !

வேறு வேறு ஊர் என்பதால்
வெறுப்பாகி போனது
விடுமுறை !
உன்னோடு உறவாட
கல்லூரி பயிலனும்
இன்னொரு முறை !

கசப்பான நாட்களில்
உன்னை
அலைபேசியில் அழைப்பேன் !
அலைபேசி வழி வரும்
உன் ஒரு சொல்லில்
என் நூறு வலிகளை தொலைப்பேன் !

ஊர் சுற்ற போகும் போதும்
நான் உன்னை சுற்றியே கிடப்பேன் !
உடன் சிலர் இருந்தாலும்
நான் உன் உடனே நடப்பேன் !

கோவில்களில் சிற்பங்களாகவும்
பூங்காக்களில் புஷ்பங்களாகவும்
நான் உன்னை இரசிப்பேன் !
நீ சொல்லி விட்டால்
பிடிக்காத உணவையும்
முகம் சுழிக்காமல் புசிப்பேன் !

முன்னூறு ஆண்டு வாழ்க்கையினை
மூன்றே ஆண்டுகளில் வாழ்ந்தோம் !
கண்ணீரும் நமக்குள் உண்டென்று
கடைசி நாளில் தானே அறிந்தோம் !

தொலைவு போனாலும்
தொலைந்து போகாது
கணவன் கண்டாலும்
கலைந்து போகாது
பிள்ளை பெற்றதோடு
பிரிந்து போகாது
நாம் சாகாது .. சாகாது !
நம் நட்பு ...



யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (2-Jul-17, 4:47 pm)
Tanglish : kalluuri thozhiye
பார்வை : 222

மேலே