நிச்சயம் முதல் கல்யாணம் வரை

[] நிச்சயம் முதல் கல்யாணம் வரை ..
-----------------------------------------------------------------
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டும் வரை
வழி வேறு இல்லை
வாயாடுவதை தவிர ..
பேச்சால் மட்டுமே
நகர்த்தபட வேண்டிய
நாட்கள் இவை ..
பேசு -
இயல்பாய் பேசு
உண்மையாய் பேசு
நீ வேறு அவள் வேறி்ல்லை
உணர்ந்து பேசு
பழக்கமில்லா யாரிடமும்
பேசி தான் பழக வேண்டும்
ஒளிவு மறைவின்றி
தெளிவாய் பேசு
செவி நோக பேசு - அவள்
மனம் நோகாது பேசு
பயம் மறைத்து தைரியம் காட்டாதே
உன் பயங்களை
அவள் பார்வைக்கு வை
எல்லாம் தெரிந்ததாய் பேசாதே
உன் தெரியாதவைகளை
அவளுக்கு தெரிவித்து விடு
உன் கொள்கை பேசு
அவள் அழகை பேசு
முன் வறுமை பேசு
உன் திறமை பேசு
ஒரு கவிதை பேசு
பேசி அவளை புரிந்து வை
பேசி உன்னை பரிய வை
பேசி பேச வை
பேசி பேசி மயங்க வை
காமம் பேசி சினுங்க வை
காமம் பேசுகையில் -
வார்த்தைகளில் கவனம் வை
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
அவளை தாங்க வேண்டும்
எப்போதும் உன் பேச்சை கேட்கவே
அவள் ஏங்க வேண்டும்
இரவில் பேசி பழகி
இனி பகலில் தூங்க வேண்டும்
- யாழ் ..