சிலையாய்

பெறுவாய் பேறென்ற
திருவாய்,முகூர்த்தம்
கருவாய் நீ உதித்தாய்!
அழகாய் மலர்வாயென
எதிர்பார்த்த,
உறவாய் நானிருக்க,
உருவாய்,மகிழ்வாய்
உதித்திங்கு,
நகர்ந்தாய்,நடந்தாய்,
வளர்ந்தாய்
செருக்காய்,மிடுக்காய்!
விருந்தாய் மருந்தாய்
பலர் கண்பட
அறிவாய், நீயறிவாய்
என உயர்வாய் நான்
நினைக்க
ஏனோ வீழ்ந்தாய்
நீ பெண்ணாய்
பிறந்ததாலோ?
சிறகொடிந்த பறவை
கணக்காய் இன்று
அடைகலமானாய்
கவலைகள் தோய்ந்த
முகத்தோடு..,
செய்வதறியா சிலையாய்
நானும் நின்றேன்
உன்னோடு
#sof_sekar