நிவேதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிவேதா |
இடம் | : |
பிறந்த தேதி | : 21-Dec-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 1264 |
புள்ளி | : 86 |
அனைவருக்கும் வணக்கம் !எனது பெயர் நிவேதா. கவிதை கட்டுரை பல நபர்கள் பதிவிடுவதை பார்த்து வியந்தேன். தற்பொழுது "பாதியில் முடிந்த வாழ்க்கை" என்ற தலைப்பில் தொடர் கதையாக எழுதி வருகிறேன். என்னுடைய முதல் கதை. மிகவும் ஆவலோடு உள்ளேன். தங்களுடைய கருத்தினை பார்க்க........முதலில் நாம் பழக்கங்களை உருவாக்குகிறோம்.பின்னர் அவை நம்மை உருவாக்குகின்றன.தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை முயற்சியின்மையின் துயரத்தை விட குறைவானதாகவே இருக்கும்.நன்றி!
இந்த பூமிக்கு இன்னொரு
உயிரை கொண்டு வர தன்
உயிரை பிணையம் வைக்கும்
பெண்மையின்
தைரியத்துக்குப் பெயர்
தாய்மை
இவள் உயிர் உள்ளவரை
உன்னை தன் கைகளால்
ஏந்துவாள் இன்று உன்னை
கையில் ஏந்தியவளை
நாளை மற்றவரிடம் நீ கை
ஏந்த வைத்து விடாதே
நான் விழிக்க
உன் முகம் வேண்டும்
என் முகம் பார்க்க
உன் விழிகள் வேண்டும்
நான் நடக்க
உன் துணை வேண்டும்
என் தலை சாய்க்க
உன் மாடி வேண்டும்
இதற்கெனவே
நீ என் கை சேர வேண்டும்
பூங்காற்று புதியதாய்
தந்த
வாசம் தான்
என்னைக் கடந்து
வந்த
என் நேசம்
வானவில் தந்த
வண்ணங்கள் தான்
உன் மீது நான் கொண்ட
எண்ணங்கள்
இயற்கை தந்த
இன்பம் தான்
எனக்குள்
இம்சை செய்யும் இவள்
இவள்
என்
காதலி
இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா?
யாருக்காக இந்த தவம்?
இடுப்பு பிடிப்போ?
உயிர் விடுமுன்
கொட்டிய முடியை ஒரு தரம்
காண விரும்பி கவிழ்ந்தாயோ
கவரிமானே...?
கேரள செய்தி படித்து
நிலநடுக்கம் வருமென்று
அச்சமுற்று அடங்குகிறாயா?
அல்லது ஆசனமா...
கிஞ்சித்தும் தொப்பை
குறையாத 1மணி நேர
விளம்பரப்பெண் போல்
ஆனதென்ன அசடே...
நிமிர்ந்து நோக்கடி
உன் அன்பு முத்தத்தில்
பூமித்தாய் பூரித்து விட்டாள்.