வான் எல்லை - ஷெரிப்
வலுவில்லா விழுதைப் போன்ற
பொலிவில்லா பொழுதை
மாற்றிடும் என் கவிதை
ஊட்டிடும் புதுத்தெம்பை.!
வாட்டிடும் உன் துயரை
வான்தடம் இடம்பெயர்த்திடு..!
காட்டிடு உன் வலிமை
தேர்ந்தெடு புது வழியை..!
ஏகமாய் பல விழிகள் நீரினில்...அதை
ராகமாய் இளங்கிளிகளின் பாரினில்
மோகமாய் மாற்றிட முடிவெடு..!
தூரமே துவண்டிடும் உன் வேகத்தில்
பாரமே பயந்திடும் உன் தேகத்தில்
காரமே இனித்திடும் உன் பேச்சினில்
நேரமே நீ வா எனில் வராது...
சாளரம் அதில் மதுவின் மழைத்துளி
மயங்கினால் அது மரணத்தின் அழைத்துளி...
மாறுமே நீ மாறினால் உலகமே..!
மாறிவிடு...நீ..மாற்றிவிடு..நீ....!