என்னவள் 13 ~ அர்ஷத்

இடைவிடாது
பயணிக்கிறது
என் கவிதை வாகனம்
அதில் நீ அமர்ந்திருப்பதால்...
சோட்டா பீம் காக
காத்திருக்கும்
குழந்தையை போல காத்திருக்கிறேன்
நீ உதடு சுளிக்கும்
கணத்திற்காக....
எங்காவது
கண்ணாடி
இருந்தால் அங்கு நின்று
உன்னை ரசித்துவிட்டு தான்
செல்கிறது உன் பிம்பம் கூட....
படிக்காமல் போன பரிட்சையில்
பாஸ் ஆனதுபோல இருக்கும்
நான் போடும் மொக்கைக்கு
நீ சிரிக்கும் போது ...
லட்டு விலிருந்து
ஒரு பூந்தியை
வாயில் வைக்கிறாய்
தனது இடப்பெயர்ப்பில்
எந்த மாற்றத்தையும்
உணராமலிருக்கிறது
அந்த பூந்தி...
தொலைவிலே
ஒரு ஐஸ் கிரீம் கடையை
பார்த்தேன் ..
நெருங்க நெருங்க
தான் தெரிந்தது
அது நீ என்று..