அழுகை

அழுகை

இயலாமையின்
குழந்தை. . .

குழந்தைகளின்
நம்பிக்கை

ஆண்களுக்கு
அவமானம். . .

பெண்களுக்கு
ஆயுதம்.. .

நட்புடனே
பரிகாசம் . . .

அன்பின்
ஆனந்த ஊற்று

இழப்புகளின்
அடையாளம் . .

ஏக்கத்தின்
விழி அருவி. . .

மன அழுத்தத்தின்
வடிகால் . . .

வலிகளின்
விழிமொழி . .

சோகத்தின்
சுனைநீர் . . .

எழுதியவர் : கு அருள்வேல் (9-May-17, 8:05 pm)
சேர்த்தது : K ARULVEL
Tanglish : azhukai
பார்வை : 1796

மேலே