கவிதையோ கவிதை
#கவிதையோ கவிதை..!
உண்ணும்போதும் உறங்கும்போதும்
உடன் வருமே கவிதை..!
அமர்ந்த போதும் நடக்கும்போதும்
கரம் பிடிக்கும் கவிதை…!
சிரிக்கும் போதும் வலிக்கும் போதும்
துணையெனவே கவிதை.!
கொடுமைகளை வறுமைகளைக்
குடித்து வளரும் கவிதை..!
காற்றினிலும் மழையினிலும்
குளிர்ந்து வரும் கவிதை..!
ஆற்றினிலே படகு விட்டு
ஆடி வரும் கவிதை…!
அழகான மயிலைத் தொட்டு
தோகை விரிக்கும் கவிதை..!
இயற்கையினை காதல் கொண்டு
எழுதி வைக்கும் கவிதை..!
இறைவனவனை எழுதி எழுதி
ஆராதிக்கும் அழகு கவிதை.!
கவலையோடு வலிகளையே
கண்ணீரில் வடிக்கும் கவிதை..!
காதல் வந்தால் போதும்டா
கை நிறைக்கும் கவிதை..!
தனிமை எனக்குத் தந்ததில்லை
தோழமைதான் கவிதை..!
இறந்த பின்னும் என்னைப்பேச
வைத்திடுமென் கவிதை..!
#சொ.சாந்தி