விடுதலை செய்

#விடுதலை செய்..!

எட்டிப்பார்த்து எட்டிப்பார்த்து
எங்கே போனாய் மழையே..??
கொட்டித் தீர்த்துப் போனால் என்ன
குறைந்தா போவாய் சொல்லேன்..!

வெட்டும் மின்னல் ஒன்றிரண்டு
வந்தது வெளிச்சம் காட்டி
சொட்டும் மழையும் போனதெங்கோ
மொத்தம் வாலைச் சுருட்டி..!

களவாடிச் சென்றாய் கடலின் நீரை
வானே விடுதலை செய்வாய்
வாடிக்கிடக்கு பூமியும் இங்கே
மழையைப் பொழிந்து அருள்வாய்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (25-Mar-19, 9:59 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : viduthalai sei
பார்வை : 110

மேலே