சிவசெந்தில் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவசெந்தில் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 206 |
புள்ளி | : 5 |
எல்லா பறவைகளும்புலம்பெயர்ந்தபின்தன் கடைசி இலையையும்உதிர்த்து விட்டபட்டமரமாய்.......அர்த்தமற்று போனதுவாழ்க்கை.
உதிரா வார்த்தைகளை
உதிர்ந்த இலைகள்
நிரப்பிக் கொள்கின்றன
வெற்று இருக்கையொன்றில்
நர்த்தனி
துகில்உரித்தலின் போது
செயலற்று நின்ற
காண்டீபமாய் மனது ....
அல்லிமுடியா கூந்தலின்
அவமானங்களுக்காய்
சபதமேற்கிறது
இருண்ட தருணங்களில்ஞானம் போதிக்கும்காலத்தின் குரல்.....நிசப்த நடுநிசியின்சாமகோடாங்கியாய்மன சாளரத்தின் அருகேஉடுக்கை அடிக்கிறது
இருண்ட தருணங்களில்ஞானம் போதிக்கும்காலத்தின் குரல்.....நிசப்த நடுநிசியின்சாமகோடாங்கியாய்மன சாளரத்தின் அருகேஉடுக்கை அடிக்கிறது
சிதறிக் கிடக்கும்
என் சிதைவுகளினூடே
உயிர்ப்புடன்
ஒருதுளி சுயமாய்....
நான் இன்னும் மிச்சம் இருக்கிறேன்!
எனக்குள் வெகுதூரம்
மனச் சிறகேறி
எனக்குள் வெகுதூரம்
வேர் ஊன்றி விரிகின்றன
என் எண்ணக் கிளைகள்!
என் காலடி ஓசைகளும்
நிசப்தத்தின் நீளுறக்கத்தை
நீட்டிப்பதாய்!
ஆனந்தத்தின் எல்லை ஆரம்பம் எனும்
பெயர்ப் பதாகை ஆங்கே
வரவேற்கிறது
இரு கரம் கூப்பி என்னை!
எங்கெங்கிலும்
இரவின் பனியாடைகளை
உலரவைத்துக் கொண்டிருக்கிறது
விடியல்!
பசும்வெளி எங்கும்
பனி எழுதிய
துளிப்பாக்களை
ஊஞ்சலாடி ரசித்தவாறு காற்று!
பனித் துளிகளுக்குள்
தன் பிம்பம் பதித்து
மேக உடுப்பை
சரி செய்தவாறு வானம்!
நுரை பொங்கச் சிரிக்கும்
அருவிகளின் ஆர்ப்பரிப்போ
தனக்குள் அமைதிப் பூங்கா அமைத்து
அமர வைக்கிறது மனதை!
முகடு காட்டாது வாஞ்சையாய்
நிற்கும் ம
சுயத்தை மறைக்கும்
எல்லா முகமூடிகளையும் கலைந்து
முகத்தை மட்டுமே மறைக்கும்
ஒற்றை முகமூடிக்குள்
மானுடம்...
நமக்கானதாய் என்றுமே இருந்திராத
வாழ்க்கையில்
நமக்கே நமக்குமட்டுமாய்
சில நாட்கள்........
கடந்தோடிய காலத்தின்
வழிநெடுகிலும்
சிதறிக்கிடக்கும் நம்மை
சேர்த்து கோர்பதற்கான
ஒரு சந்தர்பமாய்....
அவசரபுரட்டலும்
அரைகுறை வாசிப்புமின்றி
வாழ்க்கையின்
சில பக்கங்கலாவது
புரட்டபடட்டும் புரிதல்களோடு......
ஊரடங்கு.......
கிருமியின் பரவலுக்கு மட்டுமல்ல
மானுடத்தின் குரோத குணங்களுக்கும்....
தனது ஒற்றை கனையால்
பாடம் புகட்டியது இயற்க்கை
மானுடத்தின் செருக்கருபட
சுமைகூடிய சிறகுகளுக்