ஊரடங்கு

சுயத்தை மறைக்கும்
எல்லா முகமூடிகளையும் கலைந்து
முகத்தை மட்டுமே மறைக்கும்
ஒற்றை முகமூடிக்குள்
மானுடம்...

நமக்கானதாய் என்றுமே இருந்திராத
வாழ்க்கையில்
நமக்கே நமக்குமட்டுமாய்
சில நாட்கள்........

கடந்தோடிய காலத்தின்
வழிநெடுகிலும்
சிதறிக்கிடக்கும் நம்மை
சேர்த்து கோர்பதற்கான
ஒரு சந்தர்பமாய்....

அவசரபுரட்டலும்
அரைகுறை வாசிப்புமின்றி
வாழ்க்கையின்
சில பக்கங்கலாவது
புரட்டபடட்டும் புரிதல்களோடு......

ஊரடங்கு.......
கிருமியின் பரவலுக்கு மட்டுமல்ல
மானுடத்தின் குரோத குணங்களுக்கும்....

தனது ஒற்றை கனையால்
பாடம் புகட்டியது இயற்க்கை
மானுடத்தின் செருக்கருபட

சுமைகூடிய சிறகுகளுக்கு
வானமேயானாலும் சாபமே....

சிலுவைசுமையை கீழேகிடத்தி
சற்றே இளைப்பாறுவோம்
கூட்டுக்குள்......
நமக்காய் காத்திருக்கும்
நாளைய இரட்டிப்பு சுமை மறந்து....

தேவையற்றுபோன
நமது ஒப்பனை சாயத்தில்
தீட்டப்பட்ட அழகிய ஓவியமாகட்டும்
ஊரடங்கின் ஒவ்வொரு நாட்களும்.....

-சிவசெந்தில்

எழுதியவர் : சிவ செந்தில் (21-Apr-20, 1:04 pm)
சேர்த்தது : சிவசெந்தில்
Tanglish : ooradanku
பார்வை : 113

சிறந்த கவிதைகள்

மேலே