சாதிக்கும் இளைஞனுக்கு சோகம் அவசியம்

சாதிக்கும் இளைஞனுக்கு "சோகம்" அவசியம்

சோகங்கள்
சுகத்தை தருகிறது
இன்றைய
இளைஞர்களுக்கு

தோல்விகள்
இதன் காரணமல்ல

வெற்றிகள் கூட
இதிலிருந்துதான்
தொடங்குகிறது.

சோகத்தின் சுமை
தாங்காமல்

தன்னை
திசை திருப்பி
கொள்வதால்....!

திசை திருப்ப
மறந்து அல்லது
மறுத்து போனவன்

கோழையாய்
அழியா துன்பத்தை
அளித்து செல்கிறான்
அந்த குடும்பத்துக்கு

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Jul-21, 9:01 pm)
பார்வை : 107

மேலே