என் கவிதை

என் கவிதை


என் இரவுகளின் இருள் குடித்து
வெள்ளொளி புகுத்தி
வானவிற்களை நிறைக்கிறது
மனவெளி எங்கும்
என் கவிதை!

என் பகல்களின் விழிகளைத் திறவாது
நித்திரையை அணையிட்டு
கனவுப்பயிர் விதைக்கிறது
என் கவிதை!

என் வேதனைகளின்
ஆணி வேர்களை
அறுவடை செய்யும்
கலைக்கூலியாய்
என்கவிதை !

என் கற்பனைகளைச் செதுக்கி
கருச்சிதறல் காணாது
வரிவடிவூட்டும் சிறந்தச் சிற்பியாய்
என்கவிதை!

என் பொழுதுகளைத் தன் மடிசாய்த்து
நேர்த்தியாய்த் திரிக்கும்
தேர்ந்த நெசவாளனாய்
என் கவிதை!


S.UMADEVI

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 3:38 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : en kavithai
பார்வை : 184

மேலே