அன்பெனும் பூந்தோட்டம்

வாசம் நுகர
மலர் தேடி
வண்டு வர...

வெட்கத்தில்
நாணம் கொண்டு
பூவிதழ்கள் சிரிக்க...

மகிழ்ச்சியில்
ரீங்காரமிட்டு
வண்டு பறக்க...

வண்டு போல்
உன்னைச் சுற்றி
நான் பறக்க...

செவ்விதழ் கொண்டு
வெட்கத்தில்
நீ சிரிக்க...

மணம் வீசி
இழுக்கிறாய்
உன் அன்பெனும்
பூந்தோட்டத்தில்...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (23-Jul-21, 7:43 pm)
Tanglish : poonthottam
பார்வை : 101

மேலே