மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

வட்டவட்ட கண்ணாடி அணிந்தவர் நீவிர் ஐயா
வலிமையான கண்கள் அதன் பின் இருக்கு ஐயா
பொக்கை வாய் சிரிப்பு முகத்தில் உண்டு ஐயா
பொய் உரைக்காத வாய் உள்ள மனிதர் ஐயா
கம்பு வைத்து கொண்டு வேகநடை உடையவர் ஐயா
கதர் ஆடை தான் என்றும் நீங்கள் அணியும் உடை ஐயா
கல் போன்ற மன உறுதி உள்ளவர் நீங்கள் தான் ஐயா
வெள்ளையனை விரட்டியது உங்கள் மனவலிமை ஐயா
காலத்தினால் அழியாத புகழ் படைத்தவர் நீங்கள் ஐயா
மகாத்மா என்ற பெயர் உங்களுக்கே பொருந்தும் ஐயா
கைகூப்பி சிரம் தாழ்த்தி என்றும் உம்மை வணங்குவோம் ஐயா

எழுதியவர் : கே என் ராம் (3-Oct-24, 12:01 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : mahathmaa gandhi
பார்வை : 21

மேலே