கீதை வெண்பா அத்தியாயம் 5 சந்நியாச யோகம் 1 பா 1 2 3 4

1.
அருச்சுனன் கேட்கிறான் :--

கர்மத்தை விட்டுவிடு என்கின்றாய் கண்ணாநீ
கர்மத்தை கைக்கொள்க என்றும்சொல் கின்றாயே
இவ்விரண்டில் எந்தவொன்று மேலான தென்கிறாய்
அவ்வொன்றைச் சொல்வாய் எனக்கு

கண்ணன் பதில் கூறுகிறான் :--

2 .
கர்மயோகம் பின்பற்றி டும்கர்மம் நீக்கிடும்
கர்மசந் யாசயோ கத்தைபின் பற்றுமிரு
கர்மமும் நல்கும் சிறப்பினை என்றாலும்
கர்மயோகம் மேலான தாம்

3 .
பெருந்தோ ளுடையாய் வெறுப்பற் றவனும்
விருப்பம் எதுவும் இலாதோனும் இங்கே
அருந்தவ சந்நியாசி என்றறிய பட்டோன்
இருமையினை வென்றவனைப் பந்தம் எதுவும்
ஒருபோதும் கட்டிடா தே

4 .
கர்மசந் யாசம் எனும்சாங்கி யம்சிறப்பு
கர்மயோகம் தாழ்வெனச் சொல்வார்கள் பாலர்கள்
நன்குகற்ற சான்றோர்கள் கூறிடார் அவ்வாறு
ஒன்றின் வழியினில் சென்றால் இரண்டினது
நன்மையும் கிட்டுமென் பர்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Oct-24, 6:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 7

மேலே