தென்றல் வந்துன்னைத் தொடும்

தென்றல்வந் துன்னைத் தொடும்த ழுவிமகிழும்
நின்றுனைத் தாலாட்டும் நீங்காமல் சுற்றிவரும்
கூந்தலில் ஆடிடும் கன்னத்தில் முத்தமிடும்
ஏந்திவரும் நந்தவன இன்மலர் வாசமெலாம்
காந்தவிழிக் கன்பளிப் பாய்

---- பல விகற்ப அல்லது இரு விகற்ப பஃறொடை வெண்பா

அடி எதுகை ----தென் நின் ஒரு விகற்பம் கூந் ஏந் காந் இன்னொரு விகற்பம்

சீர் மோனை 1 3 ஆம் சீரில் தெ தொ நி நீ கூ க ஏ இ கா பா

காந்தவிழிக் கன்பளிப் பாய் ---காந்தவிழிக்கு அன்பளிப் பாய் என்று பிரித்துப் படிக்கவேண்டும்
விழிக்கு குற்றியலுகரம் வருவதால் புணர்ச்சிக்குப் பின்னே சீர் அமைக்கவேண்டும் என்பது யாப்பு விதி

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-24, 5:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே