மனக்கதவைத் திறந்து மௌன விழியால்

மனக்கத வைத்திறந்து மௌன விழியால்
கனவுப்பூ வைஎன்நெஞ் சத்திலே தூவி
எனதுஎண் ணத்தை எழில்சோலை ஆக்கி
மனக்குயிலாய்க் கூவிடு வாய்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
அடி எதுகை -- மன கன என மன
சீர்மோனை 1 3 ஆம் சீரில் -- ம மௌ க ச எ எ ம வா

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-24, 9:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே