மௌனத்தால் பேசவா

மௌனத்தால் பேசவா!

அவள் வாய் மொழிகள்
வெற்றிடத்தே சிந்திய ஒலி போல்
இதயச் சுவர்களுக்குள்
எதிரொலித்து அடங்காததாய் ...

அவள் மௌனங்கள்
அர்த்தம் ஆயிரம் கற்பித்து
எண்ணங்களைப் புரட்டிக் கொண்டே ....
கொழுத்த அகராதியின் பக்கங்களாய்...

அவள் நினைவுகளில்
தீய்ந்த பொழுதுகளின் மணத்தில்
ஊறிக்கொண்டே என் நடை பாதைகள்
பிரியாணிப்பதாய் ....

அவள் இதழ் வடியும்
குறும் புன்னகைகள்
என் காரியக்கிரமத்தின் சக்கரத்தை ...
சுழலவிடாது ...அடையிட்டு த்தடுப்பதாய்..

புதிர் போடும் அவள் பார்வைகளோ
கொக்கிகள் ஆகி
மூளைச் சலவை செய்து
என் நாட்களை ...தொங்க விடுவதாய்...

மனக் கண்கள்
காட்சி மாறாது காண்கிறது ...
விழித்திரையில் விழுந்த
அவள் ஒற்றை பிம்பத்தை!..
யுகம் தாண்டி ஓடும்
ஒரு திரைப்படத்தின் சுவரொட்டியாய்...


சு.உமாதேவி.

எழுதியவர் : சு.உமாதேவி (21-Jul-21, 7:38 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 284

மேலே