காத்திருக்கிறேன்

எனது எவ்வைகயான துன்பங்களையும்
துடைத்தெறியும் ஆற்றல் கொண்டது
அவளிதழில் அரும்பி என்நெஞ்சத்தில்
குடிகொள்ளும் அவள்புன்னகை.

இப்பொழுதோ! நானொரு துன்பத்தில்.
தீர்த்து வைக்க வருவாளா? எனது
துன்பம் என்னவோ அந்த புன்னகையை
சிலநாள் காணவில்லை என்பதே.

காத்திருக்கிறேன் அவளின் கால்கொலுசின்
ஓசையது என்காதுகளில் விழுந்து
என்நெஞ்சத்தின் துன்பத்தை தனது
புன்னகையால் துடைத்தெறிவாளென்று.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (11-Feb-17, 8:05 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 740

மேலே