என்னவளே

அவள் பார்த்தாலே வெண்ணிலவு விண்ணைத் தாண்டிடுமே
அவள் சிரித்தாலே மொட்டுகள்
வாயை மூடாதே
வானமாய் திறந்திருந்த
என் மனதினில்
விண்மீன்களாய் நிறைந்திருந்த
பல ஆசைகள்
காற்றில்லாத சிறுவறைக்குள்
மடித்து பூட்டினாள்
காதல் பூட்டாலே
செல்லாதே செல்லாதே
கவியுலகை மோதி செல்லாதே
சொல்லாலே சொல்லாலே
கவிதையை சிந்திப்போகாதே

விரல் நோகாமல் உதட்டிடையே கடித்த நகங்கள்
மறுத்தாலும் வளரும் உதட்டோடு உறவாடவே
நிழல் தேயாமல் காலடியே மிதித்த சாலைகள்
தவிர்த்தாலும் தொடரும்
நிழலோடு திசையாகவே

சந்தன காட்டில் சென்றாலும்
உன் மேனியின் வடிவொத்த அழகில்லை
மூங்கில் காட்டில் சென்றாலும்
உன் குரல்் ஒத்த ஓசையில்லை

பூ அழைக்காமல் இதழிடையே
விளுந்த பனித்துளி
கசிந்தாலும் வடியும்
இதழோடு குளிரூட்டவே
நதியறியாமல் கரையடியே
வளரும் வேர்கள்மறைந்திருந்தாலும் பருகும் நீரை உறவாடியே
கண்களால் காணாத காதலை கணாத காற்றிடம் தூதுவிட்டேன்
கண்களை மூடி சென்றாலும்
உன் இமைகளை வறுடாமல் போகுமா.........

எழுதியவர் : Rajeswariskumar (11-Feb-17, 8:09 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : ennavale
பார்வை : 394

மேலே