அ வீரபாண்டியன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அ வீரபாண்டியன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Aug-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 156 |
புள்ளி | : 22 |
வண்ண பூக்களும் அதநருகே
வண்ணத்து பூச்சிகளும்
காற்றில் அசைந்திடும் மரங்களும் அதன்
காதுகளில் பாடும் குருவியும்
சிறு ஓசை எழுப்பும் ஊஞ்சலும் அதில் ஆடிடும்
அழகு குழந்தையும்
கைகளை கோர்த்தபடி காதலர்களும்
கால்களை நீட்டியபடி முதியவர்களும்
நிலத்தில் போர்வையாய் புற்களும்
அதன் நடுவே சிறு சிறு எறும்புகளும்
உதிர்ந்த இலை ஒன்றை
கையில் வைத்தபடி
பனகல் பூங்காவில்
பத்து நிமிடம்
நான்...
பேரழகாய் உனை
படைத்ததும் பிரம்மன்
தன்கண் மட்டுமின்றி
காண்போர் கண்படுமேவென்றெண்ணி
உன் கீழ் உதட்டின் ஓரத்தில்
மச்சம் வைத்தானோ?
தான்
ஈன்ற கன்று குடிக்க
சுரந்த பாலெல்லாம்
ஈஸ்வரன் தலையில்
வழிந்து பாலானதே...
தான்
ஈன்ற கன்று குடிக்க
சுரந்த பாலெல்லாம்
ஈஸ்வரன் தலையில்
வழிந்து பாலானதே...
தென்றலின் தேகமோ அவள்
மின்னலின் பார்வையோ
வானவில் வண்ணமோ அவள்
வார்த்தைகளின் எண்ணமோ
ஒளியின் விழியோ அவள்
மொழியின் ஒலியோ
சிலையின் கலையோ அவள்
உளியின் வலியோ
பொய்களின் மெய்யோ அவள்
மெய்களின் பொய்யோ
நிலவின் குளிரோ அவள்
நிழலின் சுகமோ
தமிழின் அழகோ அவள்
கவிதையின் வரியோ
வானம் கருக்குதடி
வாசல் மணக்குதடி
தூரல் தெளிக்குதடி
சிறு பூவும் குளிக்குதடி
வெதைச்ச மணிகளுக்கு
வெளிச்சம் பொறந்ததடி
வரப்பு நெறஞ்சதடி
வலிகள் கொறஞ்சதடி
விதைகள் மொளச்சதடி
வேதனை கலையுமடி
பருத்தி வெடிக்குமடி
நம் பசியும் விலகுமடி
நாத்து சிரிக்குமடி நம்
நாட்கள் செழிக்குமடி
வானம் கருக்குதடி
வாசல் மணக்குதடி
தூரல் தெளிக்குதடி
சிறு பூவும் குளிக்குதடி
வெதைச்ச மணிகளுக்கு
வெளிச்சம் பொறந்ததடி
வரப்பு நெறஞ்சதடி
வலிகள் கொறஞ்சதடி
விதைகள் மொளச்சதடி
வேதனை கலையுமடி
பருத்தி வெடிக்குமடி
நம் பசியும் விலகுமடி
நாத்து சிரிக்குமடி நம்
நாட்கள் செழிக்குமடி
நீ
இதழ் திறக்காத
மௌன விரதத்தன்று
மகரந்தசேர்க்கை நடைபெறவில்லை..
தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்
வேலை நிறுத்தம் செய்ததால்...
.....காதலைச் சொல்லிடு காதலனே.....
விழி திறந்து பேசும் நீ
கொஞ்சம் உன் மொழிகளையும்
திறந்து விடு...
பார்வைகளால் பல கதைகள்
பேசுபவனே..
உன் உதடுகளை ஓர்
முறையேனும் அசைத்து விடு..
விடுகதைக்குள் சிக்கிச்
சுழலுகிறேன்..
உன் விடைகளை என்னிடம்
அனுப்பி விடு..
விடுமுறை வேண்டாம்
காதலிலே..
விடைபெறாமல் என்னுடனே
நீயும் இருந்து விடு...
மௌனம் வேண்டாம்
காதலனே..
இதழ் முடிச்சினை நீயும்
அவிழ்த்து விடு..
வரையறைகள் இனியும்
வேண்டாமே..
காதல் வார்த்தைகளை
என்னிடம் உரைத்துவிடு..
தனிமையில் நானும்
புலம்புகிறேன்..
உன் விரதம் நீயும்
முடித்து விடு..
இனியும் இடைவெளி
வேண்டாமே..
உன்னால் என்னை
நி
.....காதலைச் சொல்லிடு காதலனே.....
விழி திறந்து பேசும் நீ
கொஞ்சம் உன் மொழிகளையும்
திறந்து விடு...
பார்வைகளால் பல கதைகள்
பேசுபவனே..
உன் உதடுகளை ஓர்
முறையேனும் அசைத்து விடு..
விடுகதைக்குள் சிக்கிச்
சுழலுகிறேன்..
உன் விடைகளை என்னிடம்
அனுப்பி விடு..
விடுமுறை வேண்டாம்
காதலிலே..
விடைபெறாமல் என்னுடனே
நீயும் இருந்து விடு...
மௌனம் வேண்டாம்
காதலனே..
இதழ் முடிச்சினை நீயும்
அவிழ்த்து விடு..
வரையறைகள் இனியும்
வேண்டாமே..
காதல் வார்த்தைகளை
என்னிடம் உரைத்துவிடு..
தனிமையில் நானும்
புலம்புகிறேன்..
உன் விரதம் நீயும்
முடித்து விடு..
இனியும் இடைவெளி
வேண்டாமே..
உன்னால் என்னை
நி
சொல்லாதே சொல்லாதே
சொன்னாலும் போதாதே
உன்னாலே என்நாட்கள்
ஆகாதோ வினாக்கள்
கண்ணாலே சொன்னாலே
சாய்ந்தேனே தன்னாலே
உணைகானா நொடியாவும்
அணல்காற்றாய் உருண்டோடும்
உணைகான விழியாவும்
விண்மீனாய் அதுமாறும்
கடல் போலே கனாக்கள்
நிறை வேற கரைதாண்டும்
உனைதீண்டும் விரல்யாவும்
உன் விசையாலே செயலாகும்
சொல்லாதே சொல்லாதே
சொன்னாலும் போதாதே
உன்னாலே என்நாட்கள்
ஆகாதோ வினாக்கள்
கண்ணாலே சொன்னாலே
சாய்ந்தேனே தன்னாலே
உணைகானா நொடியாவும்
அணல்காற்றாய் உருண்டோடும்
உணைகான விழியாவும்
விண்மீனாய் அதுமாறும்
கடல் போலே கனாக்கள்
நிறை வேற கரைதாண்டும்
உனைதீண்டும் விரல்யாவும்
உன் விசையாலே செயலாகும்