காதலைச் சொல்லிடு காதலனே

.....காதலைச் சொல்லிடு காதலனே.....

விழி திறந்து பேசும் நீ
கொஞ்சம் உன் மொழிகளையும்
திறந்து விடு...
பார்வைகளால் பல கதைகள்
பேசுபவனே..
உன் உதடுகளை ஓர்
முறையேனும் அசைத்து விடு..

விடுகதைக்குள் சிக்கிச்
சுழலுகிறேன்..
உன் விடைகளை என்னிடம்
அனுப்பி விடு..
விடுமுறை வேண்டாம்
காதலிலே..
விடைபெறாமல் என்னுடனே
நீயும் இருந்து விடு...

மௌனம் வேண்டாம்
காதலனே..
இதழ் முடிச்சினை நீயும்
அவிழ்த்து விடு..
வரையறைகள் இனியும்
வேண்டாமே..
காதல் வார்த்தைகளை
என்னிடம் உரைத்துவிடு..

தனிமையில் நானும்
புலம்புகிறேன்..
உன் விரதம் நீயும்
முடித்து விடு..
இனியும் இடைவெளி
வேண்டாமே..
உன்னால் என்னை
நிரப்பி விடு....
உன் காதல் மொழிகளை
ஒருமுறையேனும் என்னிடம்
சொல்லி விடு...

எழுதியவர் : அன்புடன் சகி (6-Oct-17, 8:59 pm)
பார்வை : 1123

மேலே