வானம் பார்த்த பூமி

வானம் கருக்குதடி
வாசல் மணக்குதடி

தூரல் தெளிக்குதடி
சிறு பூவும் குளிக்குதடி

வெதைச்ச மணிகளுக்கு
வெளிச்சம் பொறந்ததடி

வரப்பு நெறஞ்சதடி
வலிகள் கொறஞ்சதடி

விதைகள் மொளச்சதடி
வேதனை கலையுமடி

பருத்தி வெடிக்குமடி
நம் பசியும் விலகுமடி

நாத்து சிரிக்குமடி நம்
நாட்கள் செழிக்குமடி

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (10-Oct-17, 9:27 am)
Tanglish : vaanam partha poomi
பார்வை : 1209

மேலே