தென்றலின் தேகம்

தென்றலின் தேகமோ அவள்
மின்னலின் பார்வையோ

வானவில் வண்ணமோ அவள்
வார்த்தைகளின் எண்ணமோ

ஒளியின் விழியோ அவள்
மொழியின் ஒலியோ

சிலையின் கலையோ அவள்
உளியின் வலியோ

பொய்களின் மெய்யோ அவள்
மெய்களின் பொய்யோ

நிலவின் குளிரோ அவள்
நிழலின் சுகமோ

தமிழின் அழகோ அவள்
கவிதையின் வரியோ

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (12-Oct-17, 11:17 pm)
Tanglish : tendralin thegam
பார்வை : 158
மேலே